பவுர்ணமி கிரிவலம் – திருவண்ணாமலைக்கு 500 அரசு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு
திருவண்ணாமலைக்கு வருகிற 13-ந்தேதி பவுர்ணமி அன்று சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ஆற்காடு, ஆரணி, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
அன்று காலையில் இருந்து இரவு வரை பல்வேறு இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்றார்.