ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவப் பத்திரிக்கை!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், கலசபாக்கம் பகுதியில் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமிக்கு நாளது பிலவ வருடம் பங்குனி மாதம் 24 ஆம் நாள் 7.04.2022 வியாழக்கிழமை முதல் சுபகிருது வருடம் சித்திரை மாதம் 3 – ஆம் நாள் 16.4.2022 சனி முடிய பிரம்மோற்சவம் நடைபெறுவதால் அன்பர்கள் அனைவரும் இறைவனை தரிசித்து திருவருளை பெறவேண்டுகிறோம்.
நிகழ்ச்சி நிரல்:
பங்குனி 23 : விக்னேஸ்வர பூஜை,மிருத்யுஷங்கிரஹணம், வாஸ்து சாந்தி பங்குனி 24 : காலை – துவஜாரோகணம், மாலை – சுவாமி இரதம் ஏறுதல், வடம் பிடித்தல். பங்குனி 28 : 5 – ஆம் உற்சவம் அன்று வேளக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம்
ஸ்வாமிகள் வருகை தர உள்ளார்கள். சித்திரை 1 : திருக்கல்யாண உற்சவம், பட்டிமன்றம். பங்குனி 23 – சித்திரை 3 : ராஜ் டிவி, விஜய் டிவி புகழ். ராஜ்குமார், செல்வகுமார் குழுவினரின் நாதஸ்வர கச்சேரி நடைபெறும்.