திருவண்ணாமலை அரசு நீச்சல் குளத்தில் ஏப்ரல் 1 முதல் நீச்சல் கற்றல் பயிற்சி முகாம்!

திருவண்ணாமலை அரசு நீச்சல் குளத்தில் ஏப்ரல் 1 முதல் ஜூன் 14 வரை நீச்சல் கற்றல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கி வரும் நீச்சல் குளங்களில் நீச்சல் கற்றல் முகாம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை நடத்தப்படுகிறது.

பயிற்சி முகாம் நடைபெறும் கால அட்டவணை:
• முதல் கட்டம் – ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 16 வரை
• இரண்டாம் கட்டம் – ஏப்ரல் 17 முதல் மே 2 வரை
• மூன்றாம் கட்டம் – மே 3 முதல் மே 16 வரை
• நான்காம் கட்டம் – மே 17 முதல் மே 31 வரை
• ஐந்தாம் கட்டம் – ஜூன் 2 முதல் ஜூன் 14 வரை

இந்த பயிற்சி முகாமில் நீச்சல் கற்க விரும்பும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.